பாரதியின் வசனகவி வாசலுக்குள் நுழைந்தால்போதும் அகப்பட்டு விடுவோம்.

0
13.page.very.good

பாரதியின் கவிதைகளை கண்கள் கவரும் போதெல்லாம் உயிருருகும் மாயவித்தை நிகழ்வது ஒன்றும் புதிதல்ல. எனினும் பாரதியின் வசனகவி வாசலுக்குள் நுழைந்தால்போதும் அகப்பட்டு விடுவோம். அந்த மாபெரும்கோட்டைக்குள் அடர்ந்த பெரும் காடு உண்டு. அந்தக்காட்டின் நடுவே ஒரு பெரும் வெளி தென்படும். இந்தவெளிக்குள் புகுந்து விட்டால் ஆதி அந்தம் அறிவதே அரிய செயல் என்று ஆகிவிடும். இப்படி இருக்க எப்படி மீண்டும் கோட்டை வாசலைக் கண்டறிந்து வெளியேவருவது ? ஆமாம் இப்படித் தான் தன்னை இழக்கவைக்கும் மாய மந்திர சக்தி வசனக்கவிக்கு உண்டு.

வசனகவி வடிவில் கவிதைகள் எழுதுவதற்கு பாதைகாட்டிய பாரதி வசனக்கவி தலைப்பின் கீழ் காட்சி, சக்தி, காற்று, கடல், ஜெகத் சித்திரம், விடுதலை என்று ஆறு தலைப்புகளைத் தருகிறார். பாரதியின் ஒட்டுமொத்த கவிதைகளில் உள்ள சிந்தனைத் தேனை ஒன்றாய் திரட்டித்த தந்தது போலவும் வசனக்கவிதென்படும்.

வசனக்கவியின் முதல் தலைப்பான காட்சியில் இரண்டுகிளைகள் உண்டு. முதலாவது இன்பம். இரண்டாவதுபுகழ். இன்பம் என்னும் கிளைக்குள் ஏழு பகுதிகள்உண்டு. முதலாம் பகுதி “இவ்வுலகம் இனியது” என்றுஆரம்பிக்கும். இந்த பகுதிக்குள் நான்கு விடயங்கள்உண்டு. முதலாவது பஞ்ச பூதங்களை இனிது என்றுவிழிக்கிறார். இரண்டாவது இயற்கையை இனிதெனக்காண்கிறார். மூன்றாவது நாலறிவு, ஐந்தறிவு, ஆறறிவுஎன்ற ஒழுங்கில் யாவுமே இனிதென்றும் நன்றென்றும்சொல்கிறார். நான்காவது ஆண், பெண், குழந்தை, இளமை, முதுமை, உயிர், சாதல் என்று அடிப்படை வாழ்வியலை இனிதென்று கொண்டாடுகிறார். இந்தநான்கு விடயங்களும் தரப்பட்ட ஒழுங்கு அபரிவிதமானது. அதை பற்றிச் சொன்னால் பாரதியின்பல பக்கங்கள் விரியும். நம் கட்டுரையும் நீளும்.

காட்சியின் இரண்டாவது பகுதியில் உடல், மனம்,புலன்கள், அறிவு, உணர்வு போன்ற அங்கங்கள்யாவும் இனிதென்று சொல்லி உணர்வே தெய்வம்என்கிறார். மூன்றாம் அங்கம் அனைத்தையுமேதெய்வமாகப் பார்க்கிறது.

மனம் தெய்வம், சித்தம் தெய்வம், உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு,
கடல், நிலம், நீர், காற்று,
தீ, வான்,
ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் — எல்லாம்
தெய்வங்கள்.

நான்காம் ஐந்தாம் கட்டங்கள் எல்லாம் ஒன்று என்றுஇணைகிறது. “இவ்வுலகம் ஒன்று.” என்று ஆரம்பித்து மேற்குறிப்பிட்ட அனைத்துமே ஒன்று என்றுஐக்கியமாகிறார்.

இன்பம், துன்பம், பாட்டு,
வண்ணான், குருவி,
மின்னல், பருத்தி — இஃதெல்லாம் ஒன்று.

ஆறாம், ஏழாம் கட்டங்கள்

எல்லா உயிரும் இன்பமெய்துக.
எல்லா உடலும் நோய்தீர்க.
எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க.

தெய்வங்களை வாழ்த்துகின்றோம். என்று தெய்வங்களைவாழ்த்தி மகிழ்கிறார். ஆக, தெய்வம் நீ என்று உணர்என்று புதிய ஆத்திச்சூடியில் குறிப்பிட்ட ஏகத்துவசிந்தனைக்குள் முதல் கிளையிலேயே வந்தடைகிறார்.

இனி இரண்டாம் கிளையான புகழ் என்பதில் என்னசொல்கிறார் என்று பார்ப்போம். இது ஞாயிறு என்ற உபதலைப்பின் கீழ் வருகிறது. அதில் 13 பகுதிகள் உண்டு.

1- இயற்கையில் நடைபெறுகின்ற செயல்கள் மீது வியப்பு வருகிறது. அதனால் பல கேள்விகள்எழுகின்றன.” ஒளி தருவது யாது ? “
2- இந்த கேள்விகளுக்கு விடை தேடுவது போல ஞாயிறின் செயல்கள் விஸ்தரிக்கப்படுகின்றன.
3.ஞாயிறினால் காணும் வைகறையையும் உஷையையும்புகழப்படுகின்றனர்.
4- ஞாயிறின் செயல்கள் பேசப்படுகின்றன.வருத்தம் , சூடு , சோர்வு , பசி யாவுமே இனிமை என்று போற்றப்படுகிறது

  1. ஞாயிறே இருளை என்ன செய்துவிட்டாய் ? என்று மீண்டும் வினா எழுப்பப்படுகிறது
  2. ⁠ஒளியே நீ யார் ? என்று ஒளியை வியந்து பார்க்கும் பேரழகு தெரிகிறது
  3. ⁠ஞாயிறு எப்படி ஒளியை வைத்திருக்கிறது என்ற கேள்வி மீண்டும் எழுகிறது
  4. ⁠ஒலிக்கும் வெம்மைக்கு என்ன தொடர்பு ? வெம்மையே தீ என உணர்தல்
  5. ⁠வெளிக்கும் ஒளிக்கும் உள்ள தொடர்பு
  6. ⁠ஞாயிறை புகழ்தல்
  7. ⁠ஞாயிறை துதித்தல்
  8. ⁠கிளை ஒன்றின் முதல் பகுதியில் பார்த்தது போலவே இதிலும் எல்லாம் ஒன்று ! யாவும் தெய்வம் ! என்று கலந்த நிலையைக் காட்டுகிறது
  9. ⁠இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள யாவற்றுக்குமான தொடர்பினைக் காட்டி ஞாயிறை வாழ்த்தித் துடிக்கிறார்

மேற்சொன்ன வசனக்கவியின் முதல் பகுதிக்குள் மட்டுமே பல மணி நேரம் சஞ்சாரம் செய்யக்கூடிய அழகும் ஆழமும் கொட்டிக் கிடக்கிறது. பாரதியை சுவைத்துத் துதிக்க இந்த ஒரு ஆயுள் போதுமா ?

ஒளியை, மின்னலை, சுடரை, மணியை,ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை — ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.

அனைத்தையும் வாழ்த்துகின்றோம். ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *