இலங்கை குறும் செய்திப் பலகை.

0
vm437

இலங்கையில் 41.8 வீதமானோர் திருமண வயது வந்தும்
திருமணம் ஆகாதாவர்களாகக் காணப்படுகிறார்கள்.

செய்தித் தொகுப்பு :- வைரமுத்து சிவராசா – யேர்மனி

  • கடந்த வருடத்தில் நாட்டில் 900 சிறுவர்கள் புற்றுநோயாளிகளாக அடையாளம் காணப்பட்டதாகப் புற்றுநோய் பணியகம் அறிவித்தது.
  • இலங்கையில் 2024ம் ஆண்டில் 595 பேரும் 2025ம் ஆண்டில் 388 பேரும் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கிறார்கள்.
  • யாழ் மாவட்டத்தில் 40 வீதத்திற்கும் மேற்பட்ட பிறப்புகள் சத்திர சிகிச்சை மூலமே இடம்பெறுவதாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்தார்.
  • தமிழர் பிரதேசங்களில் குழந்தைகள் பிறப்பு குறைவடைந்து வருவதால் பல பாடசாலைகள் மூடப்படும் அபாய நிலை எற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
  • 2026 தை, மாசி மாதங்களில் நாட்டில் 12.165 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
  • நாட்டின் வீதி விபத்துக்களால் நாளாந்தம் சராசரியாக 20 பேர்வரை பலி. கடந்த 5 வருடங்களில் 15.000 பேர் இறப்பு. இவ்வருடம் 1.1.2026 – 30.3.2026வரை 457 விபத்துகளில் 475 பேர் பலி 1.800 பேர் படுகாயம்.
  • இலங்லையில் அடையாளம் காணப்படாமல் 5.000 க்கும் அதிகமான காச நோயளர்கள் காணப்படுகிறார்கள். வருடாவருடம் 8.500 – 9.000 காசநோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள் என காசநோய் தடுப்புச் சங்கம் அறிவித்துள்ளது.
  • நாட்டில் சுமார் 20 லட்சம்பேர் சிறுநீரக நோய்களால் பாதிப்பு என விசேட மருத்துவ நிபுணர் அறிவித்துள்ளார்.
  • கடந்த ஆண்டில் நாட்டில் 11.409 சிறுவர் துஸ்பிhயோக வழக்குகள் பதிவாகியிருப்பதாக சிறுவர் பாதுகாப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
  • இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் 41.8 வீதமானோர் திருமண வயது வந்தும் திருமணம் ஆகாதாவர்களாகக் காணப்படுகிறார்கள் என புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
  • இலங்கைப் பெண்களின் கருவுறுதல் வீதம் 1.3 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5.6 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 18 வீதம் அதிகரித்துள்ளது என புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது.
  • நாட்டு மக்களின் எழுத்தறிவு வீதம் 97.4 வீதமாக உயர்ந்துள்ளது. கைத்தொலைபேசிப் பாவனை 93.8 வீதமாகவும் டிஸிற்றல் அறிவை 67.6 வீத மக்கள் பெற்றிருப்பதாகவும் புள்ளி விபரத்திணைக்களம் அறிவித்துதுள்ளது.
  • இலங்கையின் சனத் தொகையில் 4.13.939 பெண்களும் 3.13.354 ஆண்களும் மொத்தம் 7.27.293 பேர் ஏதோ ஒரு குறைபாடு மற்றும் மாற்றுத் திறனாளி;களாகக் காணப்படுகிறார்கள் என அரச புள்ளி விபரம் அறிவித- வடக்கு மாகாணத்தில் 2.726 பில்லியன் ரூபா செலவில் 1.363 புதிய வீடுகள் 6 மாதங்களுக்குள் கட்டப்படும் என வீடமைப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • டித்வா புயலின் அனர்த்த நிவாண நிதியாக 450 கோடி ரூபாவை 25 மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன. 7.31.922 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. 24.87.114 பேர் பாதிப்பு, 676பேர் பலி, 155 பேர் காணாமல் போயுள்ளனர். ,ன்னும் 1.373 குடும்பங்கள் முகாம்களில் தங்கியுள்ளனர்.
  • இலங்கை வானொலி தனது 100 வது வருட நிறைவைக் கொண்டாடியுள்ளது.
  • 2025ம் ஆண்டின் கணிப்பில் 85 அரசியல் கட்சிகள் பதிவு பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது.
  • காணாமல் போன உறவுகளைத் தேடும் உறவுகளின் போராட்டம் 10 வருடங்கள் முடிந்தும் இன்றும் தேடும் அவல நிலை தொடர்கின்றது.
  • மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் போர்ச் சுழூல்களால் நாட்டில் எரிபொருள், உணவுப்பாருட்கள் , மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன.
  • கடந்த 6 ஆண்டுகளில் 14 லட்சம் இலங்கையர்கள் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். குவைத், சவுதி அரேபியா,கட்டார்,ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளுக்கே மிக அதிகமானோர் சென்றுள்ளனர்.
  • 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி வடமாகாணம் தேசிய ரீதியில் முதலிடம்.வடமாகாணத்தில் 534 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் „ஏ“ சித்திகள் பெற்றிருக்கிறார்கள். 9.000 மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லத் தகுதி பெற்றிருக்கிறார்கள்…

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *